தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மண்டேலா திரைப்படத்தை மறு தணிக்கை செய்யக் கோரி மனு! - நடிகர் யோகி பாபு

சென்னை: நடிகர் யோகி பாபு நடித்த மண்டேலா திரைப்படத்தை மறு தணிக்கை செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம்

By

Published : Apr 20, 2021, 3:19 PM IST

தமிழ்நாடு முடி திருத்துவோர் சங்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், “மருத்துவர் சமுதாயம் என்பது மிகவும் பிற்படுத்தபட்ட சமூகமாகும். காமெடி நடிகர் யோகி பாபு நடிப்பில் வெளிவந்த மண்டேலா திரைப்படம் ஏப்ரல் 4ஆம் தேதி தனியார் தொலைக்காட்சியில் நேரடியாக வெளியானது.

இந்தப் படத்தில் முடி திருத்தும் தொழிலாளர்களை கழிவறையை கழுவச் செய்வது போன்ற காட்சிகளும், முடி திருத்தும் தொழிலாளியை செருப்பால் அடிப்பதும், காரில் ஏற அறுகதை இல்லை என காரின் பின்னே ஓடி வர சொல்வதும் போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதனை தணிக்கை குழு தணிக்கை செய்ய தவறிவிட்டது” எனக் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

மேலும், இந்தக் காட்சிகள், வசனங்கள் ஆகியவை மருத்துவர் சமுதாய மக்களின் மனதை புண்படுத்தும் வகையில் உள்ளதால், இந்தப் படத்தை மீண்டும் தணிக்கை செய்து சர்ச்சைக்குரிய காட்சிகள், வசனங்களை நீக்க படத்தின் தயாரிப்பாளர், இயக்குநருக்கு உத்தரவிட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டனர். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

இதையும் படிங்க: கரோனா தடுப்பூசி குறித்து அவதூறு: முன்பிணை கேட்டு மன்சூர் அலிகான் மனு

ABOUT THE AUTHOR

...view details