சென்னை:உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸில் பட்டியலினப் பெண்ணிற்கு நேர்ந்த கொடுமை அனைவரையும் பதற வைத்துள்ளது. இந்நிலையில், அனைத்து பெண்கள் கூட்டமைப்பு சார்பில் இணைய வழி கண்டன ஆர்பாட்டம் இன்று நடைபெறுகிறது. பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டு, நாக்கு துண்டிக்கப்பட்டு முதுகெலும்பு உடைக்கப்பட்ட அந்த பெண் இறந்த பிறகும் அவருக்கு இளைக்கப்பட்ட கொடுமை தீரவில்லை. குடும்பத்தின் அனுமதியில்லாமல், அவசரமாக அந்த பெண் எரியூட்டப்பட்ட பின்னர், பாலியல் வல்லுறவுக்கு சாட்சி எதுவும் இல்லை என்று மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் கூறுகின்றன.
நீதி கேட்க சென்ற அரசியல் தலைவர்கள், காவல்துறையினரால் தாக்கப்பட்டு கைது செய்யப்படுகிறார்கள். இந்தக் கொடூரத்தை உலகறியச் செய்த பத்திரிகையாளரின் தொலைபேசி வேவு பார்க்கப்படுகிறது.
பெண்கள் மீதான வன்முறை நாடெங்கிலும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டிருக்கும் நிலையில், ஹத்ராஸ் பெண்ணுக்கு சாதிய ஆதிக்கமும் ஆணாதிக்கமும், அதிகாரமும் இணைந்து இழைத்துவரும் அநீதியும் வன்முறையும் நீதி மற்றும் சமத்துவத்தின் மேல்கொண்ட நம்பிக்கையை கேள்வி எழுப்புகிறது.