தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

எம்.எல்.ஏ பதவியை நாளை ராஜினாமா செய்கிறார் வசந்த்குமார்! - காங்கிரஸ்

சென்னை: நாங்குநேரி சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை ஹெச்.வசந்த்குமார் நாளை ராஜினாமா செய்ய இருக்கிறார்.

vasanth kumar

By

Published : May 26, 2019, 5:54 PM IST

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி தமிழ்நாட்டின் 37 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. இதில், நாங்குநேரி சட்டப்பேரவை உறுப்பினராக ஹெச்.வசந்த்குமார் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.

இந்திய அரசியலமைப்பு சட்டவிதி 101 (2) ன் படி ஒருவர், இரு வேறு பதவிகளை வகிக்க முடியாது என்பதால், தனது நாங்குநேரி சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை நாளை தமிழ்நாடு சட்டப்பேரவை சபாநாயகரை சந்தித்து ராஜினாமா செய்ய உள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details