காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தனின் மனைவியும், தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனின் தாயாருமான கிருஷ்ணகுமாரி உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 76.
தெலங்கானாவில் உள்ள ஆளுநர் மாளிகையில் இன்று (ஆக.18) அதிகாலை கிருஷ்ணகுமாரி காலமான நிலையில், சென்னை, சாலிகிராமத்தில் உள்ள தமிழிசை சௌந்தரராஜனின் இல்லத்திற்கு அவரது உடல் இன்று மாலை எடுத்துவரப்பட்டு, நாளை (ஆக.19) நல்லடக்கம் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக தனது தாயார் கிருஷ்ணகுமாரி மறைவு குறித்து ட்வீட் செய்துள்ள தமிழிசை சௌந்தரராஜன், ”என்னை பார்த்துப் பார்த்து ஊட்டி வளர்த்த எனது தாயார் இன்று அதிகாலை என்னை விட்டு பிரிந்து சென்றார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்