தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னையில் பல லட்சம் மதிப்புள்ள குட்கா பொருட்கள் பறிமுதல் - ஆர்.கே நகர்

சென்னை: புதுவண்ணாரப்பேட்டையில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனை செய்த மூன்று பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

புதுவண்ணார்பேட்டை
Gutkha seized in chennai

By

Published : Nov 1, 2020, 11:52 AM IST

சென்னை புதுவண்ணாரப்பேட்டை மார்க்கெட் பகுதியில் குட்கா பொருட்களை விற்பனை செய்வதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்குச் சென்ற காவல் துறையினர் மாவா விற்பனையில் ஈடுபட்ட பாலசுப்ரமணியம் என்பவரை கைது செய்து விசாரித்ததில் செங்குன்றம் பகுதியில் இருந்து வாங்கி வந்து விற்பனை செய்வதாக கூறியுள்ளார்.

செங்குன்றம் பகுதிக்கு சென்ற தனிப்படை காவலர்கள் குடோனில் பதுக்கி வைத்திருந்த 50 கிலோ குட்கா மூட்டைகளை பறிமுதல் செய்து அங்கிருந்த மூன்று பேரையும் கைது செய்தனர்.

விசாரணையில் ஆர்.கே. நகர் பகுதியைச் சேர்ந்த அண்ணாமலை, ராஜேஷ்குமார், நடராஜன் என்பதும் சென்னை மாநகரத்திற்குள் காவலர்கள் கெடுபிடி அதிகமானதால் புறநகர் பகுதிகளில் வைத்து விற்பனை செய்வதாகவும் தெரிவித்தனர்.

மூன்று பேர் மீதும் வழக்குப்பதிவு செய்த புதுவண்ணாரப்பேட்டை காவல் துறையினர் 1.5 லட்சம் மதிப்புள்ள 50 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க:சட்ட விரோதமாக மது விற்ற இலங்கை அகதி கைது

ABOUT THE AUTHOR

...view details