சென்னை:தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, மாவா, ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலை பொருட்களை முற்றிலும் ஒழிப்பதற்காக சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.
இந்த நிலையில் சென்னையில் தனிப்படை போலீசார் கடந்த 7 நாட்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடத்தல் மற்றும் பதுக்கி வைத்து விற்பனை செய்தல் தொடர்பாக 143 வழக்குகள் பதிவு செய்து 146 நபர்களை கைது செய்துள்ளனர்.