தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குட்கா விற்ற நபர் கைது! - chennai saligiramam

சென்னை: சாலிகிராமத்தில் குட்கா, பான் மசாலா போன்ற போதைப்பொருட்களை விற்பனை செய்தவர் கைது செய்யப்பட்டார்.

குட்கா விற்ற நபர் கைது
குட்கா விற்ற நபர் கைது

By

Published : Jun 13, 2021, 3:37 PM IST

சென்னை சாலிகிராமத்தில் உள்ள காந்திநகர் பகுதியில் குட்கா, பான் மசாலா போன்ற போதைப் பொருட்கள் ரகசியமாக விற்பனை செய்யப்படுவதாக விருகம்பாக்கம் காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது.

தகவலறிந்த காவல்துறையினர், காந்திநகர் பகுதிக்கு விரைந்து தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்பகுதியில் உள்ள திவாகர் தெருவில், ஜாகிர் உசேன் என்பவர் குட்கா, பான் மசாலா போன்ற பொருட்களை ரகசியமாக விற்றுக் கொண்டிருந்தது தெரியவந்தது.

உடனே, காவல்துறையினர் ஜாகிர் உசேனை கைது செய்தனர். அவரிடமிருந்து சுமார் 39 கிலோ, 200 கிராம் எடையுள்ள குட்கா, பான் மசாலா புகையிலை பொருட்கள், ரொக்கப் பணம் ரூபாய் 6,800-ஐ பறிமுதல் செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: காற்றில் பறந்த கரோனா விதிமுறைகள்: துறைமுகத்தில் மீன் வாங்கக் குவிந்த மக்கள்

ABOUT THE AUTHOR

...view details