தடை செய்யப்பட்ட குட்காவை சட்டப்பேரவைக்குள் கொண்டு வந்து சபையின் மாண்புக்கு களங்கம் ஏற்படுத்தியதாக மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 21 திமுக எம்.எல்.ஏக்களுக்கு உரிமைக்குழு அனுப்பிய நோட்டீஸை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
இதுகுறித்து சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி இன்று (ஆக.25) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது பேசிய அவர், உயர் நீதிமன்றம் தீர்ப்பு வரவேற்கத்தக்க ஒன்று. 2017 காலக்கட்டத்தில் அதிமுக தன் மைனாரிட்டி அரசை காப்பாற்றிக்கொள்ள, திமுக மீது சபாநாயகர் பதிவை தவறுதலாக பயன்படுத்தி திட்டமிட்டு உரிமை மீறல் வழக்குத் தொடரப்பட்டது. தற்போது வழங்கப்பட்டுள்ள உயர் நீதிமன்ற தீர்ப்பு சபாநாயகருக்கு கொடுக்கப்பட்ட அடியை போன்றது” எனத் தெரிவித்தார்.
திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி இதையும் படிங்க...திமுகவினர் மீதான குட்கா வழக்கு: உரிமை மீறல் நோட்டீஸை ரத்து செய்து உயர் நீதிமன்றம் அதிரடி!