தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jun 25, 2021, 1:03 PM IST

Updated : Jun 25, 2021, 2:09 PM IST

ETV Bharat / state

சமூகவலைதள பதிவர் கிஷோர் கே சாமி மீது குண்டாஸ்

Kishore K Sami
Kishore K Sami

12:59 June 25

சமூக வலைதளங்களில் தலைவர்கள், பெண் பத்திரிகையாளர்கள் குறித்து அவதூறு கருத்துக்கள் பரப்பிய கிஷோர் கே.சாமி மீது குண்டாஸ் சட்டம் பாய்ந்தது.

சமூக வலைதள பதிவர் கிஷோர் கே. சாமி முன்னாள் முதலமைச்சர்கள், மற்றும் தற்போதைய தமிழ்நாடு முதலமைச்சர் குறித்தும் இழிவான கருத்துகளை பதிவு செய்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பி வந்தார். 

இந்த விவகாரம் சர்ச்சையை கிளப்பியதையடுத்து, கிஷோர் கே. சாமி மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.  கடந்த ஜூன் 14 ஆம் தேதி கைது செய்யப்பட்டு செங்கல்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூலை மாதம் பெண் பத்திரிக்கையாளர் ஒருவரை தரக்குறைவாகப் பேசியதாக மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் கிஷோர் கே சாமி மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கடந்த ஜூன் 16 ஆம் தேதி மீண்டும் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் செங்கல்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இதனைத்தொடர்ந்து, தொலைக்காட்சி செய்தியாளர் ஒருவரை சமூக வலைதளத்தில் மத ரீதியில் சித்தரித்து தரக்குறைவாக பேசியதாக கிஷோர் கே.சாமி 3ஆவது முறையாக கைதானார்.

இந்நிலையில், கிஷோர் கே சாமி மீது தொடர்ந்து புகார்கள் குவிந்து வருவதால், குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க:மீண்டும் கோயில்கள் திறப்பா? - கூடுதல் தளர்வுகள் என்னென்ன? - முதலமைச்சர் ஆலோசனை

Last Updated : Jun 25, 2021, 2:09 PM IST

ABOUT THE AUTHOR

...view details