தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குடும்பத் தகராறில் உறவினரை துப்பாக்கியால் சுட்ட உணவக உரிமையாளர் கைது - சென்னை மாவட்ட செய்திகள்

சென்னை: ராயபுரத்தில் குடும்பத் தகராறு காரணமாக உறவினரை துப்பாக்கியால் சுட்ட உணவக உரிமையாளரை காவல் துறையினர் கைது செய்தனர்.

உறவினரை துப்பாக்கியால் சுட்ட உணவக உரிமையாளர் கைது
உறவினரை துப்பாக்கியால் சுட்ட உணவக உரிமையாளர் கைது

By

Published : Oct 20, 2020, 3:43 PM IST

சென்னை ராயபுரம் காசா கிராண்ட் அடுக்குமாடி குடியிருப்பைச் சேர்ந்தவர் சையத் இப்ராகிம் ஷா (57). இவர் பாரிமுனையில் உணவகம் நடத்தி வருகிறார்.

குடும்பப் பிரச்னை காரணமாக சையத் இப்ராகிம் ஷா மனைவியின் சகோதரி மகன் அன்சாருதீனை துப்பாக்கியைக் கொண்டு சுட்டுள்ளார். துப்பாக்கியை பயன்படுத்த தெரியாமல் சுட்டதால் இருவருக்கும் காயம் ஏற்பட்டது.

இதையடுத்து அன்சாருதீன் அரசு ஸ்டான்லி மருத்துவமனையிலும், சையத் இப்ராகிம் ஷா அப்போலோ மருத்துவமனையிலும் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். அன்சாருதீன் அளித்த புகாரின்பேரில் சையத் இப்ராகிம் ஷாவை காவல் துறையினர் டிஸ்சார்ஜ் செய்து காவல் நிலையம் அழைத்துச் சென்றனர்.

பின்னர் அவர் மீது வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தல் ஆஜர்படுத்தினர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சையத் இப்ராகிம் ஷாவை பூந்தமல்லி சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

ஆனால் சிறைக்கு அழைத்துச் சென்றபோது சையத் இப்ராகிம் ஷாவுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. இதனால் அவரை காவல் துறையினர் அரசு ஸ்டான்லி மருத்துவமனை சிறப்பு வார்டில் அனுமதித்துள்ளனர்.

இதையும் படிங்க: உரிமம் பெறாத கள்ளத் துப்பாக்கிகள் வைத்திருந்த மூவர் கைது

ABOUT THE AUTHOR

...view details