இந்திய கடலோரம் வழியாக விலை உயர்ந்த போதைப் பொருள், பயங்கர ஆயுதங்கள் கடத்தி வருவதாக மத்திய போதை பொருள் தடுப்புப் பிரிவு அலுவலர்களுக்கும், இந்திய கடலோர காவல் படையினருக்கும் தகவல் கிடைத்தது.
இதையடுத்து, கேரள மாநிலம் விழிஞ்சம் பகுதிக்கு விரைந்த அலுவலர்கள் அங்கு வந்த இலங்கையைச் சேர்ந்த கப்பலை மடக்கி சோதனை செய்தனர். சோதனையில், 300 கிலோ ஹெராயின் என்னும் போதைப் பொருளை, தண்ணீர் டேங்கில் மறைத்து வைத்து இலங்கைக்கு கடத்த முயன்றது கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும், ஐந்து ஏகே 47 ரக துப்பாக்கிகள், ஆயிரம் முறை சுடக்கூடிய 9mm புல்லட்டுகள் இருந்ததையும் கண்டறிந்தனர். தொடர்ந்து நடத்திய சோதனையில், பயங்கரவாதிகளுடன் தொடர்புடைய ஆவணங்களையும் பறிமுதல் செய்தனர்.