தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பாமக ஆர்ப்பாட்டம்: கிண்டி - தாம்பரம் பேருந்துகள் நிறுத்தம் - தாம்பரம் டிபி மருத்துவமனை

இடஒதுக்கீடுகோரி பாமகவினர் நடத்தும் ஆர்ப்பாட்டத்தால் கிண்டியிலிருந்து தாம்பரம் நோக்கி செல்லக்கூடிய அனைத்து பேருந்துகளும் தாம்பரம் டிபி மருத்துவமனை அருகே நிறுத்தப்பட்டுள்ளன.

guindy to thambaram bus transport stops for pmk protest
guindy to thambaram bus transport stops for pmk protest

By

Published : Dec 1, 2020, 1:43 PM IST

சென்னை:கல்வி, வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 20 விழுக்காடு இடஒதுக்கீட்டை வலியுறுத்தி, சென்னையில் நடைபெற உள்ள ஆர்ப்பாட்டத்திற்கு வெளி மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் சென்னை விரைகின்றனர். இவர்களை காவல் துறையினர் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பி வருகின்றனர்.

ஆனால், தடையை மீறி சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பாமகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் கிண்டியில் இருந்து தாம்பரம் நோக்கி செல்லக்கூடிய அரசு மற்றும் தனியார் பேருந்துகள் அனைத்தும் தாம்பரம் சானிடோரியம் டி.பி. நோய் மருத்துவமனை அருகே நிறுத்தப்பட்டுள்ளது.

மேலும், பேருந்தில் பயணித்த அனைத்துப் பணிகளையும் இறக்கிவிட்டு பேருந்துகள் திருப்பி அனுப்பப்பட்டு வருகிறது. இதனால் பயணிகள் தாம்பரம் சானிடோரியத்தில் இருந்து நடந்து செல்லக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

இதையும் படிங்க: 'உயிரும் உள்ளமும் அங்கே!' - போராட்டத்தில் இறங்கியவர்களை தைலாபுரத்திலிருந்து உற்சாகமூட்டிய ராமதாஸ்

ABOUT THE AUTHOR

...view details