தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கிண்டி பன்னோக்கு மருத்துவமனை ஜூனில் திறக்கப்படும் - அமைச்சர் எ.வ.வேலு - EV Velu latest news

சென்னை கிண்டியில் கட்டப்பட்டு வரும் பன்னோக்கு மருத்துவமனை வரும் ஜூன் மாதத்தில் திறக்கப்படும் என அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.

கிண்டி பன்னோக்கு மருத்துவமனை ஜூனில் திறக்கப்படும் - அமைச்சர் எ.வ.வேலு தகவல்!
கிண்டி பன்னோக்கு மருத்துவமனை ஜூனில் திறக்கப்படும் - அமைச்சர் எ.வ.வேலு தகவல்!

By

Published : Apr 11, 2023, 4:43 PM IST

சென்னை: கிண்டி கிங்ஸ் மருத்துவமனை வளாகத்தில் கட்டப்பட்டு வரும் பன்னோக்கு மருத்துவமனையின் கட்டுமானப் பணிகளின் தரம் குறித்து, பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு மற்றும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எ.வ.வேலு, “ஜூன் 3ஆம் தேதி கருணாநிதியின் பிறந்தநாள் காரணமாக நூற்றாண்டு விழா கொண்டாடப்பட உள்ளது. இதனால், அவரது பிறந்தநாளில் அடிக்கல் நாட்டப்பட்ட இந்த புதிய மருத்துவமனை கட்டடத்தின் கட்டுமானப் பணிகள், தற்போது 90 சதவீதம் நிறைவு பெற்றுள்ளது. எனவே வருகிற மே 15ஆம் தேதிக்குள் கட்டுமானப் பணிகள் அனைத்தும் நிறைவு பெறும். இதனால் கருணாநிதியின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா கொண்டாட்டத்தினை ஒட்டி, ஏதாவது ஒரு தேதியில் முதலமைச்சர் மருத்துவமனையை திறந்து வைக்க உள்ளார்.

இதன் மூலம் ஜூன் மாதம் இந்த மருத்துவமனை திறக்கப்படும். கிண்டி பன்னோக்கு மருத்துவமனைக்கு கருணாநிதியின் பெயர் சூட்டுவது குறித்து முதலமைச்சர், சுகாதாரத்துறை அமைச்சர் முடிவெடுப்பார்கள்” என தெரிவித்தார். இந்த நிகழ்வில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலாளர் செந்தில்குமார் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க:சென்னை விமான நிலைய புதிய முனையம் பயன்பாட்டிற்கு வருவது எப்போது..? - அதிகாரிகள் வெளியிட்ட தகவல்!

ABOUT THE AUTHOR

...view details