சென்னை: தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வரும் சூழலில், படிப்பு, வேலை ரீதியாக வெளிநாடு செல்பவர்கள் இரண்டாவது டோஸ் தடுப்பு ஊசி செலுத்திக் கொள்ள தமிழ்நாடு அரசு சார்பாக பல்வேறு கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தடுப்பூசி செலுத்திக்கொண்ட பொதுமக்கள் வெளிநாடு செல்வதற்கு முன்னதாக, கரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழில் அவர்களின் பாஸ்போர்ட் எண்ணை இணைக்க வேண்டும் என்று பொதுச் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. .
இதற்கான வழிமுறைகளையும் பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத்துறை அறிவித்துள்ளது.
- முதலில் selfregistration.cowin.gov.in என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும்
- தடுப்பூசி செலுத்தும் போது கொடுத்த மொபைல் எண்ணை டைப் செய்ய வேண்டும்
- பின்னர், மொபைலுக்கு வந்த 6 எண் ஓடிபியை பதிவிட வேண்டும்
- அடுத்ததாக, வலது புறத்தில் உள்ள 'Raise an issue' டேப்பை கிளிக் செய்ய வேண்டும்
- அதில் 'Add passport details' ஸ்லெக்ட் செய்ய வேண்டும்
- பட்டியலில் சரியான பயனாளியைத் (correct beneficiary) தேர்ந்தெடுக்கவும்
- அங்கிருக்கும் பாக்ஸில் பாஸ்போர்ட் தகவல்களைப் பதிவிடவும்
- 'self declaration check box'-ஐ கிளிக் செய்த பிறகு submit request கொடுக்க வேண்டும்
- 'Your request for changing id under process' என்பது உறுதிப்படுத்தும் விதமாக திரையில் தோன்றும்
- மீண்டும் ஹோம் பேஜ்-க்கு சென்றுவிடும்
- அங்கு கூடுதல் தகவல்களுக்கு 'Track Request' ஆப்ஷனை கிளிக் செய்யுங்கள்
- உங்களின் பாஸ்போர்ட் தகவல் வெற்றிகரமாக கரோனா சான்றிதழுடன் இணைந்த தகவல் திரையில் தோன்றும்.
- இறுதியாக நீங்கள் பாஸ்போர்ட் இணைக்கப்பட்ட கரோனா சான்றிதழை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
இதையும் படிங்க:இன்று முதல் புறநகர் மின்சார ரயில்களில் மக்கள் அனுமதி...