தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கடைகளுக்கு குட்கா விநியோகித்தவர் கைது: 700 கிலோ குட்கா பறிமுதல் - gudka seized in tambaram

சென்னை: தாம்பரத்தில் உள்ள கடைகளுக்கு குட்கா விநியோகித்தவரை கைது செய்த காவல் துறையினர், அவரிடமிருந்த 700 கிலோ குட்கா மற்றும் 10 லட்ச ரூபாய் பறிமுதல் செய்தனர்.

gudka seized in tambaram
700 கிலோ குட்கா பறிமுதல்

By

Published : Mar 8, 2021, 12:24 PM IST

தாம்பரம் காவல் நிலைய எல்லைகுள்பட்ட கடைகளுக்கு குட்கா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட போதை பொருள்கள் விநியோகிப்படுவதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில் மணிமங்கலத்தை சேர்ந்த நரேந்திரன் (38) என்பவர் இந்த விற்பனையில் ஈடுபட்டது தெரிய வந்தது.

தொடர்ந்து அவரது வீட்டில் காவல்துறையினர் சோதனை செய்தனர். அதில் அவரது வீட்டில் சுமார் 700 கிலோ அளவிற்கு குட்கா உள்ளிட்ட போதை பொருள்கள் இருப்பது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்த தாம்பரம் காவல் துறையினர், அதனுடன் 10 லட்ச ரூபாய் பணத்தையும் பறிமுதல் செய்தனர்.

முதற்கட்ட விசாரணையில், சொந்தமாக தேநீர் கடை நடத்தி வரும் இவர், கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக பெங்களூரூருவில் இருந்து குட்கா பொருள்களை கடத்தியுள்ளதும், அவற்றை வீட்டில் பதுக்கி வைத்து பல்வேறு பகுதியில் விநியோகம் செய்ததும் தெரியவந்தது. இதற்கிடையில், சில மாதங்களுக்கு முன்னர் குட்கா வழக்கில் துரைப்பாக்கம் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:கர்நாடகாவில் தொடர் பைக் திருட்டில் ஈடுபட்ட தருமபுரி வாசி கைது!

ABOUT THE AUTHOR

...view details