சென்னை மேற்கு தாம்பரம் பாரதிதாசன் நகரைச் சேர்ந்தவர், ஜான் ரூபஸ் (57). தாம்பரம் போக்குவரத்து புலனாய்வுத் துறையில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வந்தார்.
இவருக்கு கடந்த மாதம் 22ஆம் தேதி கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது. முதலில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த, அவர் பின்பு ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.