தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'ஜிஎஸ்டியால் வணிகர்களுக்கு பாதிப்பு இல்லை..!' - கே.சி.வீரமணி - GST

சென்னை: "ஜிஎஸ்டியால் வணிகர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை" என்று, வணிகவரித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.

kc veeramani

By

Published : Jul 9, 2019, 8:43 PM IST

தமிழ்நாடு சட்டப்பேரவையின் ஒன்பதாவது நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் காலையில் சட்டம், நீதி நிர்வாகம், சிறைச்சாலைகள் உள்ளிட்ட துறைகளின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து பிற்பகல் பேரவை தொடங்கியபோது, வணிகவரித் துறையின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது.

அப்போது பேசிய அமைச்சர் ஜெயக்குமார், "தமிழ்நாடு அரசு அளித்த அழுத்தம் காரணமாகவே, 18 விழுக்காடாக இருந்த கைத்தறி பொருட்களின் வரி 5 சதவீதமாக குறைக்கப்பட்டது. தொடர்ந்து அதை பூஜ்ஜிய விழுக்காடாக குறைக்க வலியுறுத்தி வருகிறோம். அது மட்டுமல்லாமல் தமிழ்நாடு அரசின் அழுத்தம் காரணமாகவே 39 பொருள்களுக்கு ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டது. மேலும் 69 பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரியை குறைக்க தொடர்ந்து தமிழ்நாடு அரசு வலியுறுத்தும்" என்று தெரிவித்தார்.

அப்போது திமுக சட்டமன்ற உறுப்பினர் மைதீன்கான்,"பாஜக தேர்தல் அறிக்கையில் ஜிஎஸ்டி.,யில் மறுசீரமைப்பு செய்யப்படும் என கூறப்பட்டிருந்தது. ஆனால் இன்னும் குறைகளோடு உள்ள ஜிஎஸ்டியால் வணிகர்கள் வாழ்வாரத்தையும், வருவாய் இழப்பையும் சந்தித்து வருகின்றனர்" கூறினார்.

இதற்கு பதிலளித்த வணிகவரித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி, "அதிகப்படியான வருவாய் ஈட்டும் விதமாக ஜிஎஸ்டி அமலாக்கம் செய்யப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் பாதிப்பு ஏற்படுமோ என்ற அச்சம் வணிகர்களுக்கு இருந்தது. ஆனால் வணிகர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. ஜிஎஸ்டியை சிறப்பாக கையாளும் மாநிலங்களில் தமிழ்நாடு இரண்டாம் இடத்தில் உள்ளது" என்றார்.

பத்திரப்பதிவு மூலமாக அரசுக்கு கடந்த ஆண்டவிட 87ஆயிரத்து 905 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. 2017-18 ஆம் ஆண்டு 73 ஆயிரத்து 148 கோடி ரூபாய் வருவாய் கிடைத்தது. இதோடு ஒப்பிட்டு பார்க்கையில் 14 ஆயிரத்து 756 கோடி ரூபாய் வரி வருவாய் உயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

ABOUT THE AUTHOR

...view details