சென்னை:திருவொற்றியூர் தாங்கல் தெருவைச் சேர்ந்தவர் ஹரிதாஸ்(24). இவர் பாரிமுனையிலுள்ள நாட்டு மருந்துக் கடையில் பணிபுரிந்து வந்தார். இவருடைய நண்பர் சக்திவேல்(44). இவர் லாரி ஓட்டுநர் ஆவார்.
கடந்த இரு தினங்களுக்கு முன்பு ஹரிதாஸ் மற்றும் சக்திவேல் ஆகிய இருவரும் மணலி புதுநகர் அருகே பேசிக்கொண்டிருந்தனர். அப்போது, அங்கே வந்த ஒரு கும்பல் சக்திவேலிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர். உடனே அருகிலிருந்த ஹரிதாஸ் தட்டி கேட்டுள்ளார்.
இதில் இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுக் கைகலப்பாகியது. மேலும், இருவரையும் அந்தக் கும்பலைச் சேர்ந்தவர்கள் சரமாரியாகத் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர். இந்த மோதலில் சக்திவேல் ஹரிதாஸ் இருவருக்கும் தலை உடல் போன்ற பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது.
சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சோகம்
உடனடியாக அருகிலிருந்தவர்கள் படுகாயமடைந்த இருவரையும், ஆம்புலன்சில் ஏற்றி சிகிச்சைக்காகச் சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்குத் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.