தமிழ்நாட்டில் காலியாக உள்ள கிராம நிர்வாக அலுவலர், நில அளவையர், வரைவாளர் உள்ளிட்ட 6 ஆயிரத்து 491 காலிப் பணியிடங்களுக்காக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்-4 தேர்வு இன்று நடைபெறுகிறது. இப்பணியிடங்களை நிரப்புவதற்கு ஜூன் மாதம் 14ஆம் தேதி முதல் ஜூலை மாதம் 14ம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
மொத்தம் 16 லட்சத்து 31 ஆயிரத்து 647 விண்ணப்பங்கள் வந்த நிலையில் 16 லட்சத்து 29 ஆயிரத்து 864 பேர் இத்தேர்வினை எழுதுகின்றனர். தேர்வர்களில் 9 லட்சத்து 20 ஆயிரத்து 725 பேர் பெண்களும் 7 லட்சத்து 9 ஆயிரத்து 103 ஆண்களும், மூன்றாம் பாலினத்தவர் 36 பேரும், மாற்றுத்திறனாளிகள் 26 ஆயிரத்து 996 பேரும், விதவைகள் 6380 பேரும், முன்னாள் ராணுவத்தினர் 5380 பேரும் இத்தேர்வினை எழுதுகின்றனர்.