சென்னை:இதுகுறித்து தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் செயலாளர் உமா மகேஸ்வரி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,
"குரூப் 4 பதவிகளுக்கான எழுத்துத் தேர்வு 2020 செப்டம்பர் மாதம் ஒன்றாம் தேதி நடந்தது. எழுத்துத்தேர்வில் விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண் விவரங்கள் 2020 நவம்பர் மாதம் 12 ஆம் தேதி வெளியிடப்பட்டது.
இந்தத் தேர்வு தொடர்பான 2-ஆம் கட்ட கலந்தாய்வு தேர்வாணைய அலுவலகத்தில் அக்டோபர் மாதம் 11,12 ஆகிய தேதிகளில் நடைபெறும்.
கலந்தாய்விற்கு அழைக்கப்படும் விண்ணப்பதாரர்களின் மதிப்பெண்கள், காலிப்பணியிடங்களின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட தற்காலிகப் பட்டியல் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.