இது குறித்து தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் சுதன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் குரூப்-2 பணியில் (நேர்காணல் தேர்வு) ஆயிரத்து 338 பதவிகளுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு, அவர்களுக்கான முதன்மை எழுத்துத் தேர்வு பிப்ரவரி மாதம் 23ஆம் தேதி நடைபெற்றது.
குரூப்-2 பணிக்கு நேர்காணல் தேதி அறிவிப்பு வெளியானது! - குரூப் 2 பணிக்கு நேர்காணல் தேதி அறிவிப்பு
சென்னை: குரூப்-2 பணிகளுக்கு நவம்பர் 6ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை நேர்காணல் நடத்தப்படும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் சுதன் தெரிவித்துள்ளார்.
இந்தத் தேர்வினை 15 ஆயிரத்து 194 தேர்வர்கள் எழுதினர். இவர்களில் மதிப்பெண்கள், இட ஒதுக்கீடு போன்ற தமிழ்நாடு அரசுப் பணியாளர் விதிமுறைகளின் அடிப்படையில் நேர்காணலுக்குத் தற்காலிகமாக இரண்டாயிரத்து 667 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.
எனவே, இதற்கான நேர்காணல் தேர்வு நவம்பர் 6 ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை நடைபெறும். இவர்களுக்கான தேர்வுப் பட்டியல் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் வாயிலாக தெரிந்துகொள்ளலாம் என்று குறிப்பிட்டுள்ளார்.