தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குருப் 2  தேர்வு : வரும் 25 ஆம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு! - வரும் 25 ஆம் தேதி

சென்னை:  குருப் 2  நேர்முகத் தேர்வு இல்லாத பணிக்கு வரும் 25 ஆம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு  நடைபெறும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

வரும் 25 ஆம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு

By

Published : Mar 19, 2019, 10:08 PM IST

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது,

ஒருங்கிணைந்த குடிமைப்பணிகளுக்கான தேர்வு 2 ( குருப் 2 ஏ அடங்கிய) 2017-2018 ஆம் ஆண்டுக்கான நேர்முகத் தேர்வு இல்லாத பதவிகளுக்கு நேரடி நியமனம் செய்யும் பொருட்டு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் எழுத்துத் தேர்வு நடத்தியது.

அதில் விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண் விவரங்கள், கடந்தாண்டு மார்ச் 7 ஆம் தேதி அன்று வெளியிடப்பட்டது. இவர்களுக்கான 2 ஆம் கட்ட மூலச் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு, தேர்வாணைய அலுவலகத்தில் வரும் 25 ஆம் தேதி நடைபெற உள்ளது.

இந்த சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கு அழைக்கப்படும் விண்ணப்பதாரர்களின் மதிப்பெண்கள் ஒட்டுமொத்த தரவரிசை எண், இட ஒதுக்கீட்டு விதி மற்றும் மீதமுள்ள காலிப்பணியிடங்களின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட தற்காலிகப் பட்டியல் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கான தேதி, நேரம் மற்றும் விவரங்கள் அடங்கிய அழைப்புக் கடிதத்தினை தேர்வாணைய இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். மேலும் அழைக்கப்படும் அனைவருக்கும் பணி நியமனம் வழங்கப்படும் என்பதற்கான உத்தரவாதம் வழங்க இயலாது. விண்ணப்பதாரர்கள் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கு வரத் தவறினால் அவர்களுக்கு மறுவாய்ப்பு அளிக்கப்படமாட்டாது என கூறப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details