தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலர் சுதன் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், '2019ஆம் ஆண்டிற்கான ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு 1 ( குரூப் I ) அடங்கிய பதவிகளுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் முதன்மை எழுத்துத் தேர்வுக்கு தற்காலிகமாக தெரிவு செய்யப்பட்டுள்ள விண்ணப்பதாரர்கள், சான்றிதழ் சரிபார்ப்பிற்காக 2019 ஏப்ரல் 10 முதல் 2019 ஏப்ரல் 26 (வேலை நாட்களில்) வரை மாலை 5.30 மணிக்கு முன்னர் தங்களது மூலச் சான்றிதழ்களை ஸ்கேன் செய்து தேர்வாணைய இணையதளத்தில் அரசு கேபிள் டிவி நிறுவனம் நடத்தும் அரசு இ-சேவை மையங்கள் மூலமாக பதிவேற்றம் செய்ய வேண்டும்.
குருப் 1 தேர்விற்கு கட்டணம் - அரசுப்பணியாளர் தேர்வாணையம் கண்டிப்பு - TNPSC
சென்னை: குரூப் 1 தேர்விற்கு கட்டணம் செலுத்தினால் மட்டுமே சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய முடியும் என தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலர் சுதன் தெரிவித்துள்ளார்.
விண்ணப்பதாரர்கள் சான்றிதழ்களை அந்த நாளுக்குள் பதிவேற்றம் செய்யவில்லை எனில், முதன்மை எழுத்துத் தேர்வில் கலந்துகொள்ள விருப்பமில்லை எனக் கருதி அவர்களது விண்ணப்பம் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படமாட்டாது.
மேலும், முதனிலை எழுத்துத் தேர்விற்கு தேர்வுக் கட்டண விலக்கு கேட்காத விண்ணப்பதாரர்கள் அனைவரும் முதன்மைத் தேர்வுக்கான தேர்வுக் கட்டணம் ரூ.200 மட்டும் 2019 ஏப்ரல் 26-க்கு முன்னர் கண்டிப்பாக செலுத்த வேண்டும். தவறும்பட்சத்தில், அவர்களது விண்ணப்பம் நிராகரிக்கப்படும். தேர்வுக் கட்டணம் செலுத்த வேண்டிய விண்ணப்பதாரர்கள் கட்டணம் செலுத்திய பின்னரே அவர்கள் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய முடியும்' என கூறப்பட்டுள்ளது.