தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மளிகைக் கடையில் குட்கா பதுக்கிவைத்திருந்தவர் கைது - chennai district news

மளிகைக் கடையில் 30 கிலோ குட்கா பொருள் பதுக்கிவைத்திருந்த நபரை காவல் துறையினர் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.

சுடலைமணி
சுடலைமணி

By

Published : Nov 26, 2021, 1:55 PM IST

சென்னை:பல்லாவரம் அடுத்த பம்மல் சிவசங்கரன் தெருவில் மளிகைக் கடை வைத்து நடத்திவருபவர் சுடலைமணி (48). இவரது கடையில் தடைசெய்யப்பட்ட போதைப் பொருளான குட்கா வைத்து விற்பனை செய்வதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அத்தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்குச் சென்று சோதனை செய்தபோது, தடைசெய்யப்பட்ட 10 கிலோ குட்கா பொருள் இருந்தது தெரியவந்தது.

அவற்றைப் பறிமுதல்செய்து மளிகைக் கடை உரிமையாளர் சுடலைமணியை கைதுசெய்த காவல் துறையினர், விசாரணைக்குப் பிறகு நீதிமன்றத்தில் முன்னிறுத்தி சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க:சபாஷ்.. தாம்பரத்தில் பளபளக்கும் பட்டாக்கத்தி... பதுங்கிய கும்பல், தூக்கிய காவலர்கள்!

ABOUT THE AUTHOR

...view details