தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னையில் காவல்துறை சார்பில் பொதுமக்கள் குறை கேட்பு முகாம்

சென்னை: எழும்பூரில் உள்ள செங்சிலுவை சங்க வளாகத்தில் சென்னை மாநகர காவல்துறை சார்பில் நடைபெற்ற பொதுமக்கள் குறை கேட்பு முகாமில் பொதுமக்களிடமிருந்து கூடுதல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா மனுக்களை பெற்றுக் கொண்டார்.

கூடுதல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா பேட்டி

By

Published : Sep 21, 2019, 7:08 PM IST

சென்னை எழும்பூரில் உள்ள செஞ்சிலுவை சங்க வளாகத்தில் காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவின் படி பொதுமக்கள் குறை கேட்பு முகாம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கூடுதல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா எழும்பூர், மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, கீழ்ப்பாக்கம் ஆகிய பகுதி வாழ் மக்களின் குறைகளைக் கேட்டு மனுக்களை பெற்றுக் கொண்டார்.

கூடுதல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா - செய்தியாளர்கள் சந்திப்பு
இந்நிகழ்ச்சியில் முதன்முறையாக புகார் அளிக்க வந்துள்ள மக்கள் காவல்நிலையத்தை அணுகுமாறு வலியுறுத்திய அவர், புகார் அளித்த பின் உரிய நடவடிக்கை எடுக்காமலும், புகாரை பதிவு செய்யாமலும், காவல்துறையினர் அலட்சியம் காட்டினால் குறை தீர்ப்பு முகாமில் தெரிவிக்கலாம் எனவும் கூறினார். இதே போல் அம்பத்தூர்,பூக்கடை, வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட இடங்களிலும் அந்தந்த மண்டல இணை ஆணையர்கள் தலைமையில் குறைக்கேட்பு கூட்டம் நடைபெறுவதாக அவர் கூறினார்.மேலும் இந்நிகழ்ச்சியில் இணை கமிஷனர் சுதாகர், திருவல்லிக்கேணி துணை ஆணையர் சுகுனா சிங் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ABOUT THE AUTHOR

...view details