ஆந்திர மாநிலம், கடப்பாவில் கல் குவாரியில் வேலை செய்த 10 பேர் வெடி விபத்தில் உயிரிழந்ததாகவும், மற்றவர்கள் படுகாயத்துடன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருவதாகவும் நாளிதழில் செய்தி வெளியானது.
நாளிதழில் வெளியான செய்தியின் அடிப்படையில் வழக்கைத் தாமாக விசாரணைக்கு எடுத்த தென்மண்டல பசுமைத் தீர்ப்பாய நீதித்துறை உறுப்பினர் ராமகிருஷ்ணன், நிபுணத்துவ உறுப்பினர் சத்யகோபால் அமர்வு, உயிரிழப்புக்குக் காரணமான கல் குவாரி மீது விசாரணை செய்ய மாநில அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
மேலும் இது குறித்து தெரிவித்த நீதிபதிகள், குவாரி செயல்பட உரிமம், சுற்றுச்சூழல் அனுமதி வழங்கப்பட்டதா? என்பது குறித்து முழுமையாக விசாரணை செய்ய வேண்டும் என்பதால், ஐந்து மூத்த அலுவலர்கள் கொண்ட குழு அமைக்கப்படுகிறது. இந்தக் குழு கடப்பா மாவட்டத்தில் எத்தனை குவாரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது? அனுமதி இல்லாமல் செயல்படும் குவாரிகள் எத்தனை? மாநில அரசின் நடவடிக்கைகள் என்ன? சுற்றுச்சூழல் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதா? என விரிவாக ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர்.
விபத்து குறித்து ஆந்திர மாநில அரசின் குழு அறிக்கையையும் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜுலை 9ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
10 பேர் உயிரிழப்புக்குக் காரணமான குவாரி செயல்பட முறையான அனுமதி பெறப்பட்டதா? - பசுமைத் தீர்ப்பாயம் - kadapa quarry blast
சென்னை: ஆந்திராவில் 10 பேரின் உயிரிழப்புக்குக் காரணமான கல் குவாரி செயல்பட முறையான சுற்றுச்சூழல் அனுமதி வழங்கப்பட்டுள்ளதா? என விசாரணை செய்து அறிக்கை தாக்கல் செய்ய சிறப்புக் குழுவுக்கு தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
10 பேரின் உயிரிழப்புக்கு காரணமான கல்குவாரி செயல்பட முறையான அனுமதி பெறப்பட்டதா? பசுமை தீர்ப்பாயம்