சென்னை:பிரமல் மருந்தக நிறுவனம் மும்பையை தலைமையிடமாக கொண்டு பல்வேறு இடங்களில் இயங்கி வருகிறது. சங்காரெட்டி மாவட்டத்தில் உள்ள இந்த நிறுவனத்திலிருந்து வெளியேற்றப்படும் கழிவுகள் நிலத்தடி நீரை மாசுபடுத்துவதாக லக்ஷ்மி ரெட்டி என்பவர் டெல்லியில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார்.
ஆய்வுக்கு உத்தரவு
அதன் பின்னர் தீர்ப்பாயத்தின் முதன்மை அமர்வு குழு ஒன்றை அமைத்து நிலத்தடி நீரை ஆய்வு செய்யுமாறு உத்தரவிட்டது. பின்னர் அந்தக் குழு ஆய்வு செய்து நிலத்தடி நீர் மாசுபட்டுள்ளது, மழை நீர் சேகரிக்கும் குழிகள் முறையாக இல்லை என அறிக்கை சமர்ப்பித்தது.
மேலும், மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரிய விதியின் படி 1386 நாட்களுக்கு ஒரு நாள் வீதம் 60,000 ரூபாய் செலுத்த வேண்டும் எனவும், மொத்தம் 8,31,60000 ரூபாய் அபராதமாக செலுத்த வேண்டும் என அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.
இழப்பீடு தொகையை மருந்தக நிறுவனத்திடமிருந்து தெலங்கானா மாநில மாசுக்கட்டுப்பாடு வாரியம் பெற்றுக்கொள்ளுமாறு டெல்லி தேசிய பசுமை தீர்ப்பாயம் அறிவுறுத்தியது.
அதனடிப்படையில், தெலங்கானா மாநில மாசுக்கட்டுப்பாடு வாரியம் பிரமல் நிறுவனத்திடமிருந்து 2019ஆம் ஆண்டு நவம்பர் 13ஆம் தேதி ரூ. 99 லட்சத்திற்கான வங்கி உத்தரவாதத்தை பெற்று கொண்டது.
பிரமல் நிறுவனத்தின் வழக்கு