கிரீன் இந்தியா சேலஞ்ச்: கலக்கும் விஜய் ரசிகர்கள்! - பசுமை இந்தியா சவால்
சென்னை: பசுமை இந்தியா சவாலை ஏற்று மரக்கன்று நட்ட தளபதி விஜய்யை தொடர்ந்து அவரது ரசிகர்களும் மரக்கன்றுகளை நட்டு வருகின்றனர்.
![கிரீன் இந்தியா சேலஞ்ச்: கலக்கும் விஜய் ரசிகர்கள்! கிரீன் இந்தியா சேலஞ்ச்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-04:44:35:1597403675-tn-che-05-vijayfans-greenindiachallenge-script-7204754-14082020164132-1408f-1597403492-694.jpeg)
தெலுங்கு நடிகர் மகேஷ்பாபு, ஆகஸ்ட் 9ஆம் தேதி தனது 45ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, அவரது வீட்டில் செடி நடும் புகைப்படங்களை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். பின் #GreenIndiaChallenge என்ற சேலஞ்ச் வாயிலாக விஜய், ஜூனியர் என்டிஆர், ஸ்ருதிஹாசன் ஆகியோருக்கு சவால் விடுத்திருந்தார்.
இந்த சவாலை ஏற்ற விஜய், ஆகஸ்ட் 11ஆம் தேதி, தனது வீட்டில் மரக்கன்று ஒன்றை நட்டு மகேஷ்பாபு இது உங்களுக்காக என்று கூறி கிரீன் இந்தியா சவாலை செய்து முடித்தார். அதற்கான புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரல் ஆனது. இந்நிலையில், அனைத்து மாவட்ட விஜய் மக்கள் இயக்க மாவட்ட நிர்வாகிகள் மற்றும் ரசிகர்கள் அனைவரும் மரக்கன்றுகள், செடிகளை நட்டு வைத்து அந்த புகைப்படங்களை சமுக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர். கரோனா ஊரடங்கு காலத்தில், தளபதி விஜய் மக்கள் இயக்கம் உதவிகளையும், நற்பணிகளையும் செய்து வந்தது குறிப்பிடத்தக்கது.