தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரோனா பரிசோதனையில் போலி தொலைபேசி எண்கள்..மாநகராட்சிக்கு புதிய சிக்கல் - போலி தொலைபேசி எண்கள் குறித்து சென்னை மாநகராட்சி அலுவலர்கள் புகார்

சென்னையில் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் தொலைபேசி எண்களுக்கு தொடர்பு கொண்டால் தவறான எண்கள் இருப்பதால் அவர்களை அடையாளம் காணுவதில் பெரும் சிக்கலாக உள்ளது என மாநகராட்சி அலுவலர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

கரோனா பரிசோதனை
கரோனா பரிசோதனை

By

Published : Jan 19, 2022, 7:10 AM IST

சென்னை: தமிழ்நாட்டில் கரோனா தொற்று மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. நாள்தோறும் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதி செய்யப்படுகிறது. நோய் பரவலைத் தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இரவு நேர ஊரடங்கும், ஞாயிறு முழு ஊரடங்கும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சென்னை மாநகராட்சி கரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களைக் கண்டறிய பரிசோதனையை தீவிரப்படுத்தியுள்ளது. நாள் ஒன்றுக்கு 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

அதில் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் சிலரை தொடர்பு கொண்டால் , வேறு நபர்களுக்கு அழைப்பு செல்வதாக மாநகராட்சி பணியாளர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

ஒவ்வொரு நாளும் குறைந்தது 35 முதல் 40 எண்கள் போலியானவையாக உள்ளது. அல்லது 10 இலக்க எண்ணில் ஒன்று இரண்டு எண்கள் தவறாக குறிப்பிடப்பட்டு உள்ளது என தெரிவிக்கின்றனர். நாள்தோறும் 200க்கும் மேற்பட்ட அழைப்புகள் பல முயற்சிகளுக்குப் பிறகும் எந்த ஒரு தகவலும் தருவதில்லை எனவும் கூறுகின்றனர்.

அண்மையில் நடந்த ஆய்வு கூட்டத்தில், மாநகராட்சிக்கு தவறான தகவல்களை வழங்குபவர்கள் மீது பொது சுகாதாரத்துறை சட்டம் 1939இன் படி நடவடிக்கை எடுக்குமாறு மண்டல சுகாதாரத்துறை அலுவலர்களிடம் மாநகராட்சி ஆணையர் கூறியதாக தகவல் வெளியானது.

இதையும் படிங்க: திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணிக்கு மீண்டும் கரோனா தொற்று

ABOUT THE AUTHOR

...view details