இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
"சென்னை மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் (ரிப்பன் மாளிகை / அம்மா மாளிகை) பணிபுரியும் பணியாளர்கள் அலுவலகத்திற்கு வருவதற்கு ஏதுவாக சென்னை மாநகர போக்குவரத்து கழகம் மூலமாக வாடகை முறையில் 4 பேருந்துகள் பணியமர்த்தப்பட்டு 20.04.2020 முதல் பயன்பாட்டில் இருந்து வருகிறது. இந்த நிலையில் பொதுத்துறை சுற்றறிக்கையில் அனைத்து அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் பணிக்கு வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டதால் மேலும் கூடுதலாக 4 பேருந்துகள் நியமித்து உள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
அதன் விவரம்:
- தடம் எண் H1 : செங்கல்பட்டு : செங்கல்பட்டில் காலை 8.15 மணி அளவில் புறப்படும், மாலை 6 மணிக்கு ரிப்பன் மாளிகையில் இருந்து திரும்பும்.
பேருந்து பணிமனை - தாம்பரம் ( 9445030551 ).
பேருந்து வழி : செங்கல்பட்டு, சிங்கப்பெருமாள் கோயில், கூடுவாஞ்சேரி, வண்டலூர், பெருங்களத்தூர், தாம்பரம், சானிடோரியம், குரோம்பேட்டை, பல்லாவரம், திரிசூலம், மீனம்பாக்கம், ஆலந்தூர், சைதாப்பேட்டை, அண்ணாசாலை, சென்ட்ரல், ரிப்பன் மாளிகை.
- தடம் எண் H2 : திருநின்றவூர் : திருநின்றவூரில் காலை 8.15 மணி அளவில் புறப்படும், மாலை 6 மணிக்கு ரிப்பன் மாளிகையில் இருந்து திரும்பும்.
பேருந்து பணிமனை - ஆவடி ( 9445030538 ).
பேருந்து வழி : திருநின்றவூர், ஆவடி, அம்பத்தூர், பாடி, வில்லிவாக்கம், ஐசிஎப், வாட்டர் டேங்க், பச்சையப்பன் கல்லூரி, புரசைவாக்கம் ரிப்பன் மாளிகை.
- தடம் எண் H3 : கூடுவாஞ்சேரி : கூடுவாஞ்சேரியில் காலை 8.15 மணி அளவில் புறப்படும், மாலை 6 மணிக்கு ரிப்பன் மாளிகையில் இருந்து திரும்பும்.
பேருந்து பணிமனை- தாம்பரம் ( 9445030538 ).
பேருந்து வழி : கூடுவாஞ்சேரி, பெருங்களத்தூர், தாம்பரம், பல்லாவரம், போரூர், வளசரவாக்கம், வடபழனி, கோடம்பாக்கம், பவர்ஹவுஸ், வள்ளுவர் கோட்டம், நுங்கம்பாக்கம், கல்லூரி சாலை, எழும்பூர், ரிப்பன் மாளிகை.
- தடம் எண் H4 : வேப்பம்பட்டு : வேப்பம்பட்டுவில் காலை 8.15 மணி அளவில் புறப்படும், மாலை 6 மணிக்கு ரிப்பன் மாளிகையில் இருந்து திரும்பும்.