சென்னை:சிஐடிஐஐஎஸ் திட்டத்தின்கீழ் மாநகராட்சி பள்ளிகளுக்கான, பள்ளி தலைமைத்துவ மேம்பாடு மற்றும் மாற்றம் [SLDT] என்ற புதிய திட்டத்தை சென்னை மாநகராட்சி அறிமுகப்படுத்தியுள்ளது.
சென்னை மாநகராட்சி பள்ளிகள் முழுமையான மாற்றத்தை அடைவதற்குத் தேவையான தலைமைத்துவ திறன்களை மேம்படுத்த அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு பட்டறைகள் மற்றும் பயிற்சி அமர்வுகள் நடைபெற உள்ளன.
இதில் சென்னை மாநகராட்சிப் பள்ளிகளைச் சேர்ந்த மொத்தம் 600 உதவி கல்வி அலுவலர்கள் (AEO), தலைமையாசிரியர்கள் (HM), உதவித் தலைமையாசிரியர்கள் (AHM) மற்றும் மூத்த ஆசிரியர்களைத் தேர்ந்தெடுத்து பயிற்சி அளிக்கப்பட உள்ளது.