grand welcome for praggnanandhaa as he returns after runner up in fide world cup chess சென்னை:ஃபிடே உலக சாம்பியன்ஷிப் தொடர் அஜர்பைஜானில் உள்ள பாகு நகரில் நடைபெற்றது. இதன் இறுதி போட்டியில் தமிழகத்தை சேர்ந்த கிரண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா உலக தரவரிசையில் நம்பர் 1 வீரருமான, 5 முறை சாம்பியன் பட்டத்தை வென்ற மாக்னஸ் கார்ல்சென்னை எதிர்கொண்டு விளையாடினார். டை-பிரேக்கர் சுற்றின் மூலம் மாக்னஸ் கார்ல்சென் வெற்றி பெற்று அவரது 6வது சாம்பியன் பட்டத்தை உறுதி செய்தார்.
தமிழகத்தை சேர்ந்த 18 வயதுடைய பிரக்ஞானந்தா 2வது இடம் இடத்தை பிடித்து வெள்ளிப் பதக்கத்தை வென்றார். 2002ம் ஆண்டு விஸ்வநாதன் ஆனந்துக்கு பிறகு 21 ஆண்டுகள் கழித்து, உலக சாம்பியன்ஷிப்பின் இறுதி சுற்றுக்கு சென்று 2வது இடத்தை பிடித்த இவருக்கு பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வந்தனர். மேலும், தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்ததுடன், விடியோ காலில் பேசி பாராட்டினார்.
இதையும் படிங்க:World Athletics Championship: 4X400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் இந்திய அணி 5வது இடம்! தேசிய சாதனை படைத்த வீராங்கனை!
இந்நிலையில், சென்னை வந்தடைந்த பிரக்ஞானந்தாவுக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் சென்னை விமான நிலையத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அவரை வரவேற்பதற்காக விளையாட்டுத்துறை செயலாளர் அதுல்யா மிஸ்ரா, உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி ஆகியோர் வரவேற்பு அளித்தனர்.
மேலும், அவர் பயின்ற வேலம்மாள் மெட்ரிக் பள்ளி சார்பில் மாணவர்கள் வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரக்ஞானந்தாவை வரவேற்க்கும் விதமாக மேள, தாளம் முழங்க பொய்க்கால் குதிரை, கரகம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளும் சென்னை விமான நிலையத்தில் நடத்தப்பட்டன. இன்று (ஆக்ஸ்ட் 30) முதலமைச்சர் வீட்டில் அவரை பிரக்ஞானந்தா சந்திக்க உள்ளார்.
இதனை தொடர்ந்து ஆசிய கோப்பை விளையாட்டு தொடருக்கான பயிற்சியில் கலந்து கொள்ள இன்று இரவு கொல்கத்தா செல்ல உள்ளதாகவும் தெரிவிக்கபட்டுள்ளது.
இதையும் படிங்க:Asia Cup 2023: முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான் - நேபாளம் அணிகள் மோதல்!