சென்னை: செங்குன்றம் தீர்த்தக்கரையம்பட்டு பஜனை கோவில் தெருவைச் சேர்ந்தவர் இயேசு (70). இவரது மனைவி ஏகவல்லி (65). இவர் மின்சார கட்டணம் செலுத்துவதற்காக தீர்த்தக்கரையும்பட்டு சோத்துப்பாக்கம் சாலையிலுள்ள மின்சார வாரிய அலுவலகத்திற்கு நடந்து சென்றுள்ளார்.
அப்போது அவ்வழியாக வந்த கிரேன் எதிர்பாராத விதமாக ஏகவல்லி மீது மோதியது. இதில் வயிற்றுப் பகுதியில் பலத்த காயமடைந்த அவரை மீட்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக பாடியநல்லூர் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.