ஒவ்வொரு கிராமமும் ஒரு குடியரசாக இயங்க வேண்டும், நாட்டின் அடிப்படை நிர்வாக அமைப்பாக கிராம சுயாட்சி இருக்க வேண்டும் என்ற காந்தியின் கனவை நிறைவேற்றுவது வெகு தொலைவில் இல்லை. உள்ளாட்சி அமைப்புகளுக்கு போதுமான அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது, அதனை அரசியலமைப்பும் உறுதி செய்துள்ளது.
பல விவகாரங்களில் காந்தியடிகளுடன் மாற்று கருத்தைக் கொண்ட அம்பேத்கர் அதிகாரக் குவியலைக் கடுமையாக விமர்சித்தார். பஞ்சாயத்து நிர்வாகம் திறம்பட செயல்பட உதவுவது கிராமசபை. அரசியலமைப்பின்படி பஞ்சாயத்து நிர்வாக அமைப்புகளில் மிகவும் வலிமைவாய்ந்தது கிராம சபையாகும்.
சட்டப்பேரவை, நாடாளுமன்றம் போன்றவற்றில் மக்கள் பிரதிநிதிகளே ஆட்சி நடத்துவர். ஆனால், கிராம சபைகளில் மக்களே நேரடியாகப் பங்கு பெறுவர். அதற்கான அதிகாரங்கள் வழங்கப்படமால் தட்டி கழிக்கப்படுகிறது.
குடியரசு தினம், தொழிலாளர் தினம், சுதந்திர தினம், காந்தி ஜெயந்தி ஆகிய நான்கு நாள்களில் கிராம சபை கூட்டங்கள் நடைபெறுவது வழக்கம். இதைத்தவிர கிராம ஊராட்சித் தலைவர் விரும்பும்போது சிறப்புக் கூட்டங்களை நடத்தலாம். நாட்டின் முதுகெலும்பான கிராமங்களை நிர்வாகம் செய்யும் கிராம சபைகளில் எம்மாதிரியான தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகிறது, அதன் முக்கியத்துவம் என்ன என்பதைப் பற்றி விளக்க குத்தம்பாக்கம் இளங்கோ ரங்கசாமியை அணுகினோம்.
யார் இந்த இளங்கோ?