தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கிராம சபை கூட்டம் - அரசு அனுமதி - சென்னை மாவட்ட செய்திகள்

அக்டோபர் இரண்டாம் தேதி காந்தி ஜெயந்தி அன்று பல்வேறு கட்டுப்பாடுகளுடன் கிராம சபைக் கூட்டம் நடத்த தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியுள்ளது.

கிராம சபை கூட்டம் நடத்த அரசு அனுமதி
கிராம சபை கூட்டம் நடத்த அரசு அனுமதி

By

Published : Sep 20, 2021, 4:37 PM IST

சென்னை: இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், "கிராம சபை கூட்டங்களை திறந்தவெளியில் நடத்த வேண்டும். கலந்துகொள்பவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப இடைவெளியுடன் இருக்குமாறு இடங்களைத் தேர்வு செய்ய வேண்டும்.

மாவட்ட ஆட்சியர்கள் இதுகுறித்த வழிகாட்டு நெறிமுறைகளை கிராம பஞ்சாயத்துகளுக்கு வழங்க வேண்டும். கூட்டம் நடத்துவதற்கு முன் அனைவருக்கும் வெப்பநிலை பரிசோதனை செய்ய வேண்டும்.

கிராம சபை கூட்டம் நடத்த அரசு அனுமதி

6 அடி தகுந்த இடைவெளி இருப்பதையும் முகக்கவசம் அணிந்திருப்பதையும் உறுதி செய்ய வேண்டும். கரோனா அறிகுறிகள் இருந்து தனிமைப்படுத்தப்பட்டவர்கள், 14 வயதிற்குட்பட்ட குழந்தைகள் கூட்டத்தில் கலந்து கொள்ளக் கூடாது. அக்டோபர் 2 ஆம் தேதி காந்தி ஜெயந்தி அன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை கூட்டம் நடைபெற வேண்டும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:'எந்தக் குறையாக இருந்தாலும் சொல்லுங்க; அதை திமுக அரசு சரி செய்யும்'

ABOUT THE AUTHOR

...view details