தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு! - அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு

சென்னை: அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்த தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு

By

Published : Oct 17, 2019, 9:44 PM IST

தமிழ்நாடு அரசு அங்கன்வாடி பணியாளர், சத்துணவு திட்ட அமைப்பாளர், கிராம உதவியாளர் உள்ளிட்ட மாநில அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்த உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், "தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தி உத்தரவிடப்படுகிறது. அதன்படி மாநில அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி, அடிப்படை ஊதியத்தில் 12 விழுக்காட்டில் இருந்து 17 விழுக்காடாக வழங்கப்படும். இந்த தொகை ஜூலை ஒன்றாம் தேதி முதல் கணக்கிட்டு வங்கி கணக்கில் செலுத்தப்படும். இந்த உத்தரவு முழு நேர பணியாளர்களுக்கு மட்டுமே பொருந்தும்" என்று தெரிவித்துள்ளது.

மேலும், அரசு உதவி பெறும் கல்வி நிறுவன ஆசிரியர், ஆசிரியர் அல்லாத பிற அலுவலர், உள்ளாட்சி அமைப்பு அலுவலர்கள், பல்கலைக்கழக மானியக் குழு சம்பள வீதத்தில் வரும் ஊழியர்கள், உடற்பயிற்சி இயக்குனர்கள், நூல்கள், கிராம உதவியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், சத்துணவு அமைப்பாளர், சமையலர், சமையல் உதவியாளர், ஊராட்சி செயலர், எழுத்தர் ஆகியோருக்கு பொருந்தும் என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details