சென்னை: தாம்பரம் அடுத்த கெளரிவாக்கத்தில் உள்ள ப்ளுஸ்டோன் நகைக்கடையில், இன்று அதிகாலை 4.20 மணியளவில் மர்ம நபர்கள் சிலர் பைப் வழியாக ஏறிச் சென்று லிப்ட் மூலம் இறங்கி கடைக்குள் சென்று கொள்ளையடித்துள்ளனர். இந்த திருட்டு நடப்பது குறித்து கடையின் மேலாளர் ஜெகதீசனுக்கு அலாரம் மூலம் தகவல் சென்றுள்ளது.
இதுகுறித்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு ஜெகதீசன் தகவல் அளித்துள்ளார். இதனையடுத்து சேலையூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். மேலும் அங்குள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றிய காவல்துறையினர், விசாரணையை முடுக்கினர்.
இதில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது வட மாநில நபர் என்பது உறுதிபடுத்தப்பட்டது. அதன்பின்னர் அப்பகுதி முழுவதும் தனிப்படை போலீசார் சோதனையிட்டு அருகில் சுற்றித் திரிந்த ஒரு நபரை கைது செய்தனர். தொடர்ந்து இரண்டு பேர் என மொத்தம் மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
இது தொடர்பாக சோழிங்கநல்லூர் தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “இன்று காலை 6 மணியளவில் கெளரிவாக்கத்தில் ப்ளுஸ்டோன் நகைக்கடையில் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதாக தகவல் கிடைத்தது.