தமிழ்நாடு முழுவதும் உள்ள 149 அரசு கலை கல்லூரிகளில், 108 கல்லூரிகள் அரசு கல்லூரிகள், 41 அரசு கல்லூரிகள் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளாக இருந்து அரசு கல்லூரியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளன.
108 அரசு கல்லூரியில் யுஜிசி தகுதியுடன் பணிபுரியும் கௌரவ விரிவுரையாளர்களுக்கும், யுஜிசி தகுதி இல்லாமல் தொகுப்பு ஊதியத்தில் பணியாற்றிவரும் கௌரவ விரிவுரையாளர்களுக்கும் சம்பளமாக ரூ.20 ஆயிரம் வழங்கப்படுகிறது.
ஆனால் கடந்தாண்டு தமிழ்நாட்டில் வேகமாக பரவிய கரோனா தொற்று காரணமாக யுஜிசி வழிகாட்டுதலின்பேரில் அரசு கல்லூரிகளில் ஆன்லைன் வகுப்புகள் மூலமாகவே பாடம் நடத்தப்படுகிறது.
ஊதிய நிலுவை
கௌரவ விரிவுரையாளர்களுக்கு ஜூன் முதல் ஏப்ரல் மாதம் வரை 11 மாதத்திற்கு மட்டுமே சம்பளம் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அரசு கல்லூரி கௌரவ விரிவுரையாளர்களுக்கு ஊதிய நிலுவையை உடனடியாக வழங்கவேண்டும் என பாமக இளைஞரணி செயலாளர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.