தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தொழிற்கல்விபடிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீட்டில் முன்னுரிமை! - govt school students reservation

தொழிற்கல்வி படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இடஒதுக்கீட்டில் முன்னுரிமை வழங்குவதற்கு பரிந்துரை செய்ய திட்டமிட்டுள்ளதாக, டெல்லி உயர் நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி முருகேசன் தெரிவித்தார்.

govt-school-students-reservation-on-professional-course
தொழிற்கல்விபடிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீட்டில் முன்னுரிமை

By

Published : Jul 5, 2021, 4:05 PM IST

Updated : Jul 5, 2021, 4:59 PM IST

சென்னை:பொறியியல், வேளாண்மை, கால்நடை மருத்துவம், மீன்வளம், சட்டம் உள்ளிட்ட இளநிலை தொழிற்கல்விபடிப்புகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் மாணவர் சேர்க்கையின் போது, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இளநிலை மருத்துவப் படிப்பில் முன்னுரிமை வழங்கியது போல், தொழிற்கல்விபடிப்புகளிலும் வழங்குவதற்குப் பரிந்துரை செய்ய திட்டமிட்டுள்ளதாக, டெல்லி உயர் நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி முருகேசன் தெரிவித்தார்.

தொழிற்கல்விபடிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு அளிக்கப்படும் பரிந்துரையின் பயன்கள் நடப்பாண்டிலேயே கிடைக்கும் வகையில், குழுவிற்கு ஒதுக்கப்பட்ட காலத்திற்குள் அறிக்கையினை தாக்கல் செய்யவும் திட்டமிட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்

ஆலோசனை கூட்டம்

தொழிற்கல்வி படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்து, அதனை நிவர்த்தி செய்வதற்காக டெல்லி உயர் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது.

தொழிற்கல்விபடிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீட்டில் முன்னுரிமை- ஓய்வுபெற்ற நீதிபதி

இந்தக் குழுவின் 3ஆவது ஆலோசனைக் கூட்டம் தொழில்நுட்பக் கல்வி இயக்குனர் அலுவலகத்தில் இன்று (ஜூலை5) நடைபெற்றது.

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நீதிபதி முருகேசன், "அரசுப் பள்ளியில் படித்த மாணவர்கள் முன்னணி தொழிற்கல்வி கல்லூரிகளில் இடங்களைப் பெறுவதில் உள்ள பாதிப்பு குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க அரசு உத்தரவிட்டது.

அதனடிப்படையில் தொழிற்கல்வியில் அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்கள் எத்தனை பேர் சேர்ந்தார்கள் என்ற விபரங்கள் பெறப்பட்டுள்ளன.

மாணவர்கள் சேரும் விகிதம்

அதன் அடிப்படையில் தரவுகள் தயாரிக்கப்பட்டு அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்யத் திட்டமிட்டுள்ளோம். அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் தொழிற்கல்வி படிப்புகளில் 10 விழுக்காடு கூட சேர்வதில்லை.

இதற்குப் பல்வேறு காரணங்கள் உள்ளன. அதேபோல் அரசு சட்டக் கல்லூரியில் நடத்தப்படும் சட்டப் படிப்பில் அரசு பள்ளிகளில் படித்த 30 விழுக்காடு மாணவர்கள் சேர்கின்றனர்.

அரசுப்பள்ளிகளின் தரத்தை மேம்படுத்தவேண்டும்- ஓய்வுபெற்ற நீதிபதி முருகேசன்

ஆனால், ஐந்து ஆண்டுகள் சீர்மிகு சட்டப் பல்கலைக்கழகத்தால் நடத்தப்படும் ஹானர்ஸ் சட்டப்படிப்பில் சேர்வதற்கு நுழைவுத் தேர்வு நடத்தப்படுவதால், 3 விழுக்காடு அரசு பள்ளி மாணவர்கள் மட்டுமே பங்கேற்கின்றனர்.

அரசு பள்ளி மாணவர்கள் சமூக பொருளாதார பிரச்னைகளுக்கு இடையில் படித்து வருகின்றனர். மேலும், அரசு பள்ளியில் போதுமான உள்கட்டமைப்பு வசதிகளும் இல்லாமல் உள்ளது.

கிராமப்புறங்களில் உள்ள மாணவிகளை பள்ளிக்கு அனுப்பும்போது, உள்கட்டமைப்பு வசதி இல்லாததால் அவர்கள் அவதிப்படுகின்றனர். இதுபோன்ற சூழ்நிலையையும் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது.

தொழிற்கல்வி படிப்புகளில் இடஒதுக்கீடு

கிராமப்புறங்களில் உள்ள பெற்றோர்களுக்கு பல்வேறு படிப்புகள் குறித்து விழிப்புணர்வு குறைவாக இருக்கின்றது. அரசு பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு வேளாண்மை, சட்டம், பொறியியல், கால்நடை மருத்துவம், மீன்வளம் உள்ளிட்ட இளநிலை பட்டப் படிப்புகளில் இளநிலை மருத்துவப் படிப்பில் இடஒதுக்கீடு வழங்கியது போல், முன்னுரிமை அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்குவதற்கும் ஆலோசித்து வருகிறோம்.

இடஒதுக்கீடு குறித்து ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ள பல்வேறு தீர்ப்புகளையும் ஆய்வு செய்து வருகிறோம். வரைவு அறிக்கை தயார் செய்யப்பட்டு, துறை செயலாளர்களுடன் ஆலோசனை செய்து இறுதி அறிக்கை தயார் செய்யப்படும்.

அரசு பள்ளி மாணவர்களுக்கான பாதிப்பை ஆய்வு செய்து அறிக்கை அளிப்பதற்காக ஜூன் மாதம் 15ஆம் தேதி அரசால் குழு அமைக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து 18ஆம் தேதி பணியைத் தொடங்கினோம். அரசு குறிப்பிட்ட ஒரு மாத காலத்திற்குள் பணியை முடித்து அறிக்கையை சமர்ப்பிப்போம்.

அதனடிப்படையில் நடப்பு கல்வியாண்டு முதல் தொழிற்கல்வி படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான இட ஒதுக்கீட்டில் முன்னுரிமை வழங்க அரசு முடிவெடுத்து அறிவிக்கும்" என்றார்.

இதையும் படிங்க:சட்டப்பேரவையில் காகிதமில்லா பட்ஜெட் தாக்கல் செய்ய ஆலோசனை!

Last Updated : Jul 5, 2021, 4:59 PM IST

ABOUT THE AUTHOR

...view details