சென்னை:தமிழ்நாட்டின் மாநிலப் பாடத்திட்டத்தில் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் மாணவர்களை சேர்ப்பதற்கான வழிகாட்டுதல் நெறிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது. 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு நடத்தப்படாமல், அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், 11ஆம் வகுப்பில் ஒரு குறிப்பிட்ட பாடத்திட்டத்தில் சேர்வதற்கு அதிகளவில் மாணவர்கள் விண்ணப்பம் செய்தால் 9ஆம் மதிப்பெண்கள் அடிப்படையில் பிரிவினை ஒதுக்கீடு செய்யலாம் என வழிகாட்டுதல் நெறிமுறைகளில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், 14ஆம் தேதி பள்ளிகளுக்கு தலைமை ஆசிரியர்கள், பணியாளர்கள் வரவேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. கரோனா தொற்றால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதால், தனியார் பள்ளியில் படிக்கவைத்த பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அரசுப்பள்ளிகளில் சேர்க்க ஆர்வம் காட்டுகின்றனர்.
சேர்க்கைக்கு முன்பதிவு