இதுகுறித்து தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இயக்குனரகம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில்,
ஜனவரி 1ஆம் தேதி 1969ஆம் ஆண்டு முதல் டிசம்பர் 31ஆம் தேதி 1969ஆம் ஆண்டு- பிறந்த தமிழ்நாடு அரசு பணி அ, ஆ, இ ஆகிய பிரிவைச் சேர்ந்த அலுவலர்கள்
ஜனவரி 1ஆம் தேதி 1964ஆம் ஆண்டு முதல் டிசம்பர் 31ஆம் தேதி 1964ஆம் ஆண்டு - பிறந்த, பணியில் சேர்ந்த 'ஈ' பிரிவு அலுவலர்கள்
ஜனவரி 1ஆம் தேதி 1989ஆம் ஆண்டு முதல் டிசம்பர் 31ஆம் தேதி 1989ஆம் ஆண்டு - பணியில் சேர்ந்த 30 வருடம் பணிக்காலத்தை நினைவு செய்தவர்கள்.
மேற் சொன்னவர்களை டிசம்பர் 31ஆம் தேதிக்குள் கணக்கிட்டு 50 வயது (அடிப்படை பணியாளர்களுக்கு) அல்லது 30 ஆண்டு பணி காலம் நிறைவு இதில் எது முதலில் வருகிறதோ அவர்களை கட்டாய விடுப்பில் அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே இவர்களது விவரங்களை அனுப்ப வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இணை இயக்குனர், துணை இயக்குனர்களுக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. இந்த விவரங்களை டிசம்பர் 10 ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும், இல்லையெனில் நடவடிக்கை எடுக்கப்படும்" என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 'ஜெயலலிதா சமாதிக்கு நடந்துகூட செல்லாத தினகரன்' - விளாசி தள்ளிய புகழேந்தி!