தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோயம்பேடு மார்க்கெட்டில் சில்லறை வர்த்தகத்திற்கு விரைவில் தடை? - சென்னை மாவட்ட செய்திகள்

சென்னை: கரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில் சில்லறை வர்த்தகத்திற்கு தடை விதிப்பது குறித்து சிஎம்டிஏ அலுவலர்கள் ஆலோசனை நடத்திவருகின்றனர்.

கோயம்பேடு மார்க்கெட்
கோயம்பேடு மார்க்கெட்

By

Published : Apr 4, 2021, 6:14 PM IST

கோயம்பேடு காய்கறி, கனி, மலர் விற்பனை மொத்த அங்காடியில் நாளொன்றுக்கு கோடிக்கணக்கில் வர்த்தகம் நடைபெற்றுவருகிறது. இதை நம்பி ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பிழைப்பு நடத்திவருகின்றனர். மொத்த விற்பனை மட்டுமின்றி இங்கு சில்லறை விற்பனையும் நடந்துவருகிறது.

இந்நிலையில், 2020ஆம் ஆண்டு மே 5ஆம் தேதி கரோனா பரவல் காரணமாக இந்த மார்க்கெட் மூடப்பட்டது. தளர்வுகளுக்கு பின் செப்டம்பர் மாதம் 28ஆம் தேதி மார்க்கெட் மீண்டும் திறக்கப்பட்டது. தற்போது மீண்டும் கரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில், தேர்தலுக்கு பின் பல்வேறு வித கட்டுப்பாடுகள் விதிக்கப்பட இருக்கிறது. இது குறித்து வியாரிகள் உடன் ஆலோசனை செய்யப்பட்ட பின் முடிவு எடுக்கப்படும் என அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக சில்லறை விற்பனைக்கு தடை விதிக்கப்படலாம் என கூறப்படுகிறது.

இதையும் படிங்க: நன்னிலம் பகுதிகளில் பருத்தி சாகுபடிக்கு உர தட்டுப்பாடு

ABOUT THE AUTHOR

...view details