அரசு தேர்வுத் துறை இயக்குநர் பழனிசாமி அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள கடிதத்தில், 'பத்தாம் வகுப்பு மற்றும் பதினொன்றாம் வகுப்பு காலாண்டு, அரையாண்டுத் தேர்வுகளுக்கான விடைத்தாள்கள் கட்டுகளையும், மாணவர்களது காலாண்டு மற்றும் அரையாண்டுத் தேர்வுக்கான மதிப்பெண் பதிவு செய்யப்பட்டுள்ள அரசின் மதிப்பெண் பதிவேடுகளையும் வரும் ஜூன் 22ஆம் தேதி முதல் 26ஆம் தேதிக்குள் மாவட்ட கல்வி அலுவலர்கள் தெரிவிக்கும் பள்ளியில் ஒப்படைக்க வேண்டும்.
மாணவர்களின் காலாண்டு மற்றும் அரையாண்டு மதிப்பெண்களின் சராசரியின் அடிப்படையில் 80 விழுக்காடு மதிப்பெண்களும், வருகைப்பதிவேட்டின் அடிப்படையில் 20 விழுக்காடு மதிப்பெண்களும் வழங்கப்பட உள்ளன. பள்ளிகள் அளித்த மாணவர்களின் விவரங்களைச் சரிபார்த்து மதிப்பெண்களை இணையதளத்தில், மாவட்ட கல்வி அலுவலர்கள் முகாம்களை அமைத்து பதிவேற்றம் செய்ய வேண்டும்.
அதேபோல் காலாண்டு, அரையாண்டுத் தேர்வுக்கான விடைத்தாள்கள், மாணவர்களுக்கு முன்னேற்ற அறிக்கைகள், மதிப்பெண் பதிவேடுகள் இல்லாத பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் வழங்கும் விளக்கக் கடிதங்களை பெற்றுக்கொள்ள வேண்டும்.