சென்னை: ஒவ்வொரு சுதந்திர தினத்தன்றும் பொதுமக்களுக்கு தன்னலம் பாராமல் பணியாற்றிய காவல்துறை அலுவலர்களுக்கு சிறப்பு பதக்கங்கள் வழங்கப்படுவது வழக்கம். அதேபோல், இந்த ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு, 15 காவல்துறை அலுவலர்களுக்கு சிறப்பு பதக்கங்களை தமிழ்நாடு அரசு அறிவித்திருக்கிறது.
அதன்படி,
1. அமரேஷ் புஜாரி
2. அ.அமல்ராஜ்
3. சு.விமலா
4. ந.நாவுக்கரசன்
5.பா.பிரேம் பிரசாத் ஆகிய 5 காவல் அலுவலர்களின் பணியைப் பாராட்டி, முதலமைச்சரின் காவல் பதக்கம் வழங்கப்படவுள்ளது.
மேலும், 10 காவல் அலுவலர்களுக்கு, புலன் விசாரணைக்கான சிறப்பு பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இவர்களுக்கு சுதந்திர தினக் கொடியேற்ற விழாவில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பதக்கங்களை வழங்குவார்.
இதையும் படிங்க:சுதந்திர தினம்: ரயில் நிலையங்களில் பாதுகாப்பு பணிகள் தீவிரம்