தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஒலிம்பிக்கில் பங்கேற்ற தமிழ்நாடு வீரர்களுக்கு அரசு வேலை- அமைச்சர் மெய்யநாதன் - govt job for tamil nadu athletes

சென்னை: ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றுள்ளவர்களில் தனலட்சுமி, சுபா வெங்கடேசன் ஆகியோருக்கு அரசு வேலை வழங்கப்படும் என விளையாட்டுத் துறை அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.

Minister Meyyanathan
அமைச்சர் மெய்யநாதன்

By

Published : Jul 26, 2021, 3:24 PM IST

Updated : Jul 26, 2021, 4:17 PM IST

சென்னை தலைமை செயலகத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் மெய்யநாதன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொண்டிருக்கும் தமிழ்நாடு வீரர்களை உற்சாகப்படுத்தும் விதமாக ’வென்று வா வீரர்களே’ எனும் பாடல், ட்விட்டர் ஹேஷ் டேக் முதலமைச்சரால் தொடங்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் வீரர்களுடன் துணை நிற்கிறோம். அது மட்டுமில்லாமல் அடுத்த ஒலிம்பிக் போட்டியில், தமிழ்நாட்டில் இருந்து குறைந்தபட்சம் 25 பதக்கங்களை வெல்ல வேண்டும் என்பதே நமது இலக்கு. இந்த பாடலுக்கு இசையமைத்த யுவன் சங்கர் ராஜாவுக்கு நன்றி. தமிழ்நாடு வீரர்கள் வெற்றியோடு திரும்புவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.

அரசு வேலை நிச்சயம்

தமிழ்நாட்டில் 4 ஒலிம்பிக் மண்டலங்கள் தொடங்கப்பட்டு, 6 முதல் 16 வயதுள்ளோருக்கு பயிற்சி அளித்து ஒலிம்பிக் போட்டிக்கு தயார் செய்வதே அரசின் இலக்கு. தற்போது தமிழ்நாட்டிலிருந்து ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றுள்ளவர்களில் தனலட்சுமி மற்றும் சுபா வெங்கடேசன் ஆகியோர் நாடு திரும்பியவுடன் அவர்களுக்கு அரசு பணி ஆணையை தமிழ்நாடு முதலமைச்சர் வழங்குவார்” என்றார்.

இதையும் படிங்க: மீராபாய் வெள்ளி தங்கமாக வாய்ப்பு!

Last Updated : Jul 26, 2021, 4:17 PM IST

ABOUT THE AUTHOR

...view details