தமிழ்நாட்டில் தொடர்ந்து கரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், சென்னை உள்பட தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் மருத்துவ சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
குறிப்பாக தலைநகர் சென்னையில் மருத்துவ சிகிச்சையில் இருப்பவர்களுக்கு படுக்கை தட்டுப்பாடு ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. அரசு மருத்துவமனையில் போதுமான அளவிற்கு படுக்கைகள் இருந்தாலும், பெரும்பாலானவர்கள் குறிப்பிட்ட சில மருத்துவமனைகளுக்கு செல்கின்றனர்.
சென்னையிலுள்ள அரசு மருத்துவமனைகள் நிரம்பி விட்ட நிலையில், குணமடைந்து வீட்டிற்கு செல்பவர்களுக்கு ஏற்ப, புதிய நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
மருத்துவமனைகளின் விவரங்கள் அரசு மருத்துவமனைகளில் 9 ஆயிரத்து 845 படுக்கைகளும், மாநகராட்சி சார்பில் செயல்படும் கரோனா பாதுகாப்பு மையங்களில் 13 ஆயிரம் படுக்கைகளும் உள்ளன.
தொடர்ந்து படுக்கைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கக் கூடுதலாக கரோனா பாதுகாப்பு மையங்களை திறக்க மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது.
மருத்துவமனைகளின் விவரங்கள் கரோனா சிகிச்சை வழங்க அதிக படுக்கைகள் தேவைப்படுவதால், தனியார் மருத்துவமனைகள் மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் படுக்கைகளை அரசு கேட்டுள்ளது. படுக்கைகள் மற்றும் ஊழியர்களை தனியார் மருத்துவமனைகள் வழங்கும் எனவும், அதற்கான செலவு, மருந்துகள் ஆகியவற்றை அரசு ஏற்கும் என மக்கள் நல்வாழ்வுத் துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க:6 மாநில பயணிகளுக்குக் கட்டாய கரோனா நெகட்டிவ் சான்றிதழ் - மகாராஷ்டிரா அரசு