கரோனா வைரஸ் காரணமாக பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால் பல்வேறு தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டு வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளன. இதிலிருந்து மக்கள் பெருமளவில் பாதிக்கப்படுவதைத் தவிர்ப்பதற்காக அரசு பல கோடி ரூபாய் செலவு செய்து வருகின்றது.
'அரசு அதிகாரிகள் விமானங்களில் உயர் வகுப்பில் பயணிக்க அனுமதி கிடையாது' - அரசு தகவல் - govt bans higher officials to stop travelling in high class flyte
சென்னை: அரசு அதிகாரிகள் விமானங்களில் உயர் வகுப்பில் பயணிக்க அனுமதி கிடையாது என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
!['அரசு அதிகாரிகள் விமானங்களில் உயர் வகுப்பில் பயணிக்க அனுமதி கிடையாது' - அரசு தகவல் cm](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-7294939-536-7294939-1590085205670.jpg)
cm
இந்நிலையில், அரசின் செலவினங்களைக் குறைப்பதற்காக தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ள ஆணையின் விவரம் பினருமாறு,
- அரசு விழாக்களில் பொன்னாடை, பூங்கொத்து, நினைவுப் பரிசு வழங்கலை தவிர்க்க வேண்டும்.
- நிர்வாக ரீதியான பணி மாற்றத்திற்கு மட்டுமே அனுமதி.
- மதிய விருந்து, இரவு விருந்துகளை தவிர்க்க அதிகாரிகளுக்கு அறிவுரை.
- அரசு அதிகாரிகள் விமானங்களில் உயர் வகுப்பில் பயணிக்க அனுமதி கிடையாது.
- நிர்வாக ரீதியான பணி மாற்றத்திற்கு மட்டுமே அனுமதி .
- மதிய விருந்து, இரவு விருந்துகளை தவிர்க்க அதிகாரிகளுக்கு அறிவுரை .
- சுகாதாரத் துறை, தீயணைப்புத் துறை மட்டுமே உபகரணங்களைக் கொள்முதல் செய்ய அனுமதி .
- மாநிலத்திற்கு வெளியே அதிகாரிகள் விமானத்தில் சென்றாலும் ரெயில் கட்டணத்திற்கு இணையான கட்டணம் மட்டுமே அனுமதி.
TAGGED:
tn order