தமிழ்நாடு

tamil nadu

By

Published : Oct 22, 2019, 11:26 PM IST

ETV Bharat / state

தனியார் மட்டும் லாபம் அடைய வேண்டுமா? -வங்கி ஊழியர்கள் சங்கம் கேள்வி

சென்னை: வங்கிகள் ஒன்றிணைப்பால் 80 ஆண்டுகளாக செயலாற்றிக் கொண்டிருக்கும் வங்கிகள் மூடும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது என்று அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்க பொதுச் செயலாளர் சி.எச்.வெங்கடாசலம் தெரிவித்தார்.

venkadachalam

வங்கிகள் இணைப்பு நடவடிக்கைக்கு எதிராக அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் (AIBEA) மற்றும் இந்திய வங்கி ஊழியர்கள் சங்க கூட்டமைப்பு (BEFI) ஆகிய இரண்டு வங்கி ஊழியர்கள் சங்கத்தினர் இன்று நாடு தழுவிய போராட்டம் நடத்தினர்.

நாடு முழுவதும் நடைபெற்ற இந்த போராட்டத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வங்கி ஊழியர்களும் கலந்துகொண்டனர். இது தொடர்பாக அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் சி.எச்.வெங்கடாசலம் ஈடிவி பாரத்திற்கு பிரேத்ய பேட்டியளித்தார்.

அதில், "வங்கிகள் இணைப்பை எதிர்த்து திட்டமிட்டபடி இன்று நாடு தழுவிய போராட்டம் நடைபெற்றது. இதில் பொதுத்துறை வங்கிகள், தனியார் வங்கிகள், அயல்நாட்டு வங்கிகள் என ஏராளமான வங்கிகளில் இருந்து 3 லட்சம் பேர் கலந்துகொண்டனர்" என்று தெரிவித்தார்.

வங்கி ஊழியர்கள் போராட்டத்தால் மக்களின் நிலை என்ன?

போராட்டத்தால் இயல்பான வங்கி சேவைகள் பாதிக்கப்பட்டது. பல இடங்களில் ஏடிஎம் செயல்படவில்லை 15 கோடி ரூபாய் மதிப்பிலான காசோலை பரிவர்த்தனைகள் பாதித்தன.
இதனால் வாடிக்கையாளர்களுக்கு சிரமம் என்றாலும் அவர்ளுக்காகத்தான் நாங்கள் போராடி வருகிறோம் என்பதை மக்கள் உணர வேண்டும்.

வங்கிகள் ஒன்றிணைப்பால் நாட்டிற்கு நன்மைதானே?

வங்கிகள் ஒன்றிணைப்பால் 80 ஆண்டுகளாக செயலாற்றிக் கொண்டிருக்கும் வங்கிகளை மூடும் அபாய நிலை ஏற்படுகிறது. வங்கிக் கிளைகள் மூடப்படும், வங்கிச் சேவைகள் குறையும். பெரிய வங்கிகள் சாதாரண மக்களின் கடன் தேவையை பூர்த்தி செய்யாது. பெரிய வங்கிகள்தான் தேவை என்றால் தற்போது சிறிய வங்கிகளுக்கு அரசு ஏன் அனுமதி அளிக்கிறது.

அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்க பொதுச் செயலாளர் சி.எச்.வெங்கடாசலம்

வங்கி ஊழியர்களின் பாதிப்பு எங்கே இருக்கிறது?

தனியார்கள் சிறிய வங்கி சேவைக்கு வரும்போது பெரு நிறுவனங்களுக்கு கடன் வழங்கி ஆபத்து ஏற்படக்கூடிய வங்கிகளை அரசு நடத்த வேண்டுமா. தனியார் வங்கி ஊழியர்கள், கூட்டுறவு வங்கி ஊழியர்கள், ரிசர்வ் வங்கி ஊழியர்கள் என பல்வேறு தரப்பினரும் எங்களுக்கு ஆதரவளித்துள்ளனர். மக்களும் இந்தப் பிரச்னையை புரிந்துகொண்டு எங்களுக்கு ஆதரவளிக்க வேண்டும்.

உங்களது போராட்டம் வலுப்பெறுமா?

இனி வரும் நாட்களில் போராட்டத்தை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளோம். வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில், அரசியல் கட்சிகள் மூலமாக இந்தப் பிரச்னையை முன்னெடுக்க உள்ளோம். எந்தவித நன்மையும் தராத வங்கிகள் இணைப்பு நடவடிக்கைக்கு எதிரான போராட்டம் மேலும் தீவிரப்படுத்தப்படும் என்றார்.

ABOUT THE AUTHOR

...view details