தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பெண்களுக்கு இலவச பேருந்து பயணம்: தமிழ்நாடு அரசின் முக்கிய அறிவிப்பு - govt announcement on women passengers safety

மாநகர பேருந்துகளில் இலவசமாக பயணிக்கும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய ஓட்டுநர், நடத்துநர்களுக்கு சென்னை மாநகர போக்குவரத்து கழகம் அறிவுறுத்தியுள்ளது.

government buses
பேருந்து

By

Published : Jul 25, 2021, 5:57 PM IST

சென்னை:சென்னை மாநகர போக்குவரத்து கழகம் இயக்கும் சாதாரண பயணக் கட்டண பேருந்துகளில் மகளிர் இலவசமாக பயணிக்கலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர்கள் தங்களது பணியின்போது கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகளை சுட்டிக்காட்டி மீண்டும் ஒருமுறை சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் அறிவுரை வழங்கி சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

சுற்றறிக்கையில் இடம்பெற்றுள்ள நடைமுறைகள் பின்வருமாறு:

  1. பயணிகள் பேருந்திற்காக நிற்கும்போது பேருந்தை நிறுத்தி பயணிகளை ஏற்றிச்செல்ல வேண்டும். ஒரு பயணி நின்றாலும் பேருந்தை நிறுத்த வேண்டும்.
  2. ஒட்டுநர் பேருந்தை குறித்த பேருந்து நிறுத்தத்தில்தான் நிறுத்த வேண்டும். பேருந்தை நிறுத்தத்திற்கு முன்போ, தாண்டியோ நிறுத்தி பயணிகளுக்கு இடையூறு செய்யக்கூடாது.
  3. நடத்துநர்கள் வேண்டும் என்றே பேருந்தில் இடமில்லை என, பேருந்தில் ஏற முயலும் பெண் பயணிகளை பேருந்தில் இருந்து இறக்கிவிடக்கூடாது.
  4. வயது முதிர்ந்த மகளிர்களுக்கு இருக்கையில் அமர உதவி புரிய வேண்டும்.
  5. பெண் பயணிகளிடம் எரிச்சலூட்டும் வகையில் கோபமாகவோ, ஏளனமாகவோ, இழிவாகவோ பேசக்கூடாது.
  6. பேருந்தில் பெண் பயணிகளிடம் உபசரிப்புடனும் அன்புடனும் நடந்துகொள்ள வேண்டும்.
  7. பெண் பயணிகள் ஏறும்போதும், இறங்கும்போதும் கண்காணித்து ஓட்டுநருக்கு சமிக்ஞை (signal) செய்து பாதுகாப்பாக ஏற்றி இறக்க வேண்டும். ஆண்கள் இருக்கையில் (பொது இருக்கை) பெண்களை அமர அனுமதிக்க வேண்டும்.

அனைத்து கிளை மேலாளர்கள், உதவி கிளை மேலாளர்கள், மண்டல அலுவலர்கள், வருவாய் மேலாளர்கள், நேரக்காப்பாளர்கள் , போக்குவரத்து மேற்பார்வையாளர்கள் உள்ளிட்டோர் அரசின் உத்திரவினை எவ்வித புகாரும் இன்றி செயல்படுத்தவேண்டும்.

அதற்கு எதுவாக அனைத்து ஓட்டுநர்கள், நடத்துநர்களுக்கு நன்கு விளக்கிக் கூறி, எவ்வித பிரச்சனையும் இல்லாமல் மகளிர் பயணம் செய்வதை உறுதிபடுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:பலன் தருமா ஒயிட் போர்ட் இலவச பயணம்... வரவேற்புகளும் கோரிக்கைகளும்!

ABOUT THE AUTHOR

...view details