தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆளுநர் உரையில் வளர்ச்சி திட்டங்களுக்கான அறிவிப்பு இல்லை - திருநாவுக்கரசர்

சென்னை: ஆளுநர் உரையில் தமிழ்நாட்டிற்கான வளர்ச்சித் திட்டங்கள் எதுவும் இல்லை என காங்கிரஸ் மூத்தத் தலைவர் திருநாவுக்கரசர் குற்றஞ்சாட்டினார்.

காங்கிரஸ் மூத்த தலைவர் திருநாவுக்கரசர் செய்தியாளர்ச் சந்திப்பு
காங்கிரஸ் மூத்த தலைவர் திருநாவுக்கரசர் செய்தியாளர்ச் சந்திப்பு

By

Published : Jan 7, 2020, 2:20 PM IST

சென்னை விமான நிலையத்தில் காங்கிரஸ் மூத்தத் தலைவரும், திருச்சி எம்.பி.யுமான திருநாவுக்கரசர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், “சட்டப்பேரவையில் உரையாற்றிய ஆளுநர் உரையில் தமிழ்நாடு வளர்ச்சித் திட்டங்களுக்கான போதுமான அறிவிப்புகள் எதுவும் வெளியிடப்படவில்லை. தமிழ்நாட்டில் சுமார் ஒரு கோடி பேர் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவுசெய்துவிட்டு காத்திருக்கின்றனர். அவர்களுக்கான திட்டங்கள் எதுவும் இல்லை. படித்து வேலையில்லாமல் உள்ளவர்களுக்கு மத்திய அரசின் பங்கீட்டுடன் மாதந்தோறும் உதவித்தொகை வழங்க வேண்டும்.

காங்கிரஸ் மூத்தத் தலைவர் திருநாவுக்கரசர் செய்தியாளர்கள் சந்திப்பு

மேலும், கிராமப்புறங்களில் குடிநீர் திட்டங்கள், காவிரி உபரிநீரை புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களுக்குச் செல்லும்வகையில் திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் குறித்தும் எதுவும் இல்லை. வரும் நிதிநிலை அறிக்கையிலாவது இதுபோன்ற திட்டங்களைத் செயல்படுத்த வேண்டும்" எனக் கூறினார்.

இதையும் படிங்க...உடனுக்குடன்: தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் நிகழ்வுகள்

ABOUT THE AUTHOR

...view details